இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் மேளா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் மேளா தற்போது மே 8-ம் தேதி நடைபெற இருக்கிறது. இது நாடு முழுவதும் 200 இடங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேளாவில் உள்ளூரில் இளைஞர்களுக்கு பொருத்தமான தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கு உள்ளூர் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தனிநபர்கள் https://www.apprenticeshipindia.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மேளாவில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், ஐஐடி சான்றிதழ் பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் ஆகியோர் பதிவு செய்து பயன்பெறலாம்.