இந்தியாவில் இந்து மதத்தில் பசுமாடு என்பது புனிதமான விலங்காக கருதப்படுகிறது. பசு மாட்டின் பால், கோமியம், மாட்டுச்சாணம் போன்றவற்றை இந்து மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். அதன் பிறகு பசு மாட்டின் கோமியத்தை குடிப்பதால் நன்மை நடக்கும் எனவும் மாட்டுச்சாணத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் நல்லது எனவும் சில மூடநம்பிக்கைகள் உலா வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மாட்டின் கோமியத்தில் 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் பிரபல நிறுவனங்களின் மசாலா பொருட்களில் மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் போன்றவைகள் கலந்திருப்பதாக யூடியூபில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோவால் அந்த நிறுவனங்களின் மசாலா பொருட்களை வாங்க மக்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மசலா பொருட்களில் மாட்டுச்சாணம் மற்றும் கோமியம் போன்றவைகள் கலக்கும் வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என கூகுள் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.