
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இதில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இத்தொடரின் முதல் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைப்பெற்றது. பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து கேப்டன் கேபி லெவிஸ் 92 ரன்களும், லீ பால் 59 ரன்களும் அடிக்க 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் பெற்றது. இதில் 239 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணியில் ஸ்மிருத்தி மன்தனா மற்றும் பிரதிகா ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து நிதானமாக விளையாடிய ஸ்மிருத்தி 41 ரன்களில் வெளியேறினார். மேலும் அற்புதமாக விளையாடிய பிரதிகா 89 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய டேஜல் 53-க்கு ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் 34.3 ஓவர்லே இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதில் மிதாலி ராஜ் 112 இன்னிங்ஸ்களில் 4000 ODI ரன்களை கடந்திருந்த நிலையில் மிருத்தி மந்தனா 96 வின்னிங்ஸ்களில் கடந்து முதல் இந்திய வீராங்கனையாக சாதனைப்படுத்துகிறார். அது மட்டுமல்லாது அதி வேகமாக இந்த சாதனையை படைத்த 3-வது உலக வீராங்கனை என்ற சாதனையும் இவர் பெற்றுள்ளார்.