இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அனைத்து சேவைகளும் ஒரே போனில் கிடைப்பதால் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் ஸ்மார்ட் ஃபோன்களில் பணப்பரிமாற்றம் செய்ய இருப்பதால் அதனை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தற்போது போனை லாக் செய்வதற்கு கைரேகை மற்றும் கருவிழி பயன்பாடு உள்ளது.

அதனைப் போலவே மனிதனின் மூச்சுக்காற்றை பயன்படுத்தி அன்லாக் செய்யும் வசதியை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாள சான்றுகளை உருவாக்கலாம் என சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நுரையீரலில் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களின் வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனை அடையாளம் காண முடியும் என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.