ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாமக்கல் பாளையத்தில் ராமசாமி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய மேகநாதன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை மேகநாதன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் மேகநாதன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.

இதற்கிடையே குழந்தையை தேடிய பெற்றோர் தண்ணீர் தொட்டியில் மேகநாதன் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மேகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.