லியோ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் இடம்பெற்றிருப்பதாக  இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

மற்ற தமிழ் திரைப்படங்களை விட லியோ திரைப்படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமான சினிமா ரசிகர்களும் ஆர்வமாக இருப்பதற்கான மிகப்பெரிய ஸ்டாரான தளபதி விஜய் அவர்கள் இடம்பெற்று இருப்பது ஒரு காரணமாக இருப்பினும், படத்தில் ஏராளமான பிரபல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் என்பதும், மற்றொரு காரணமாகும். படத்திற்கான படப்பிடிப்பே முடிந்து விட்டாலும், படத்தில் இடம் பெறக்கூடிய கேமியோ கதாபாத்திரங்களுக்கான தேர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக நெட்டிசன்கள்  சமீபத்தில் கிண்டல் அடித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் தற்போது படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது லியோ படக்குழுவில் பணியாற்றிய சிலர் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதை கண்ட நெட்டிசன்கள் லியோ படக்குழுவினர்களுடன் எஸ் கே இருப்பதால், லியோ படத்தில் அவரும் கேமியோ  ரோலில் உள்ளாரோ ? என  நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.