ராஜஸ்தானில் கோலாயத்தில் உள்ள வார்டு எண் 10-ல் மதன் பரீக் என்பவரின் வீடு இருக்கிறது. இவரின் வீட்டிற்குள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அவர் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.  இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

இதனை அறிந்த திருடர்கள் வீட்டின் ஜன்னலை உடைக்க முயன்றனர். ஆனால் ஜன்னலை உடைக்க முடியாததால் என்ன செய்வது என்று தெரியாது தவித்தனர். வெளியே சென்று  பொதுமக்கள் கையில் சிக்கினால் அவ்வளவுதான் என உணர்ந்த திருடர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் திருடர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.