இந்தியத் தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் “சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை” (Special Intensive Revision – SIR) மீண்டும் தொடங்க உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் முதல், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான வாக்காளர்கள் விடுபடக் கூடாது என்பதற்காகவும், இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும் இந்த SIR முறை பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நேரடியாக வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி, வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.