கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த பிளஸ்-1 மாணவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை விடுதி அறையில் மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறினர்.

உடனடியாக பள்ளி நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? பள்ளி அல்லது விடுதியில் ஏதேனும் மன உளைச்சல் ஏற்பட்டதா? அல்லது குடும்பப் பிரச்சனையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நன்றாகப் படித்து வந்த மாணவி திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்தது அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.