சமீப காலமாகவே ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. அதன்படி மின் உற்பத்தி 4 மெகா வாட்டாக குறைந்தது. இதன் காரணமாக அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர்.
அதோடு ஏராளமான தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இது 10-வது மின் நிறுத்தம் ஆகும். இதுகுறித்து மின்சார அதிகாரி கூறியதாவது, பவர் கிரிட் செயலிழந்துள்ளது. அதனால் போதிய மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.