இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வாலிபர்கள் சிலர் காட்டிற்குள் உள்ள ஓடையில் குளிக்கின்றனர். அப்போது ஒரு வாலிபர் ஓடைக்கு அருகே உள்ள மரங்கள் நிறைந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் பின் மற்றொருவர் அந்த நிலப்பரப்பிற்கு ஏற முயற்சி செய்கிறார் மற்றும் சில வாலிபர்கள் நீரில் அமர்ந்து குளிக்கின்றனர்.

இந்நிலையில் அந்த மரத்திலிருந்த மலைப்பாம்பு ஒன்று அமர்ந்திருந்த வாலிபரின் முதுகில் கொத்தியது. இதில் பதறி அடித்து அனைவரும் அங்கிருந்து ஓடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.