இந்தியாவில் ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், தற்போது 6.25 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் இருக்கிறது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வங்கிகளிலும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவைகளுக்கான வட்டியை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தற்போது வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் MLCR எனப்படும் வீட்டுக் கடன் உள்ளிட்ட சில்லரை கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது.

இந்த வட்டி விகித உயர்வினால் வாகன கடன், தனிநபர் கடன் போன்றவைகளுக்கான இஎம்ஐ கட்டணம் அதிகரிக்கும். இந்நிலையில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தின் படி ஒரு மாத காலத்திற்கு 8.40 சதவீத வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 3 மாதங்களுக்கான வட்டி விகிதமானது 8.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து 6 மாத காலத்திற்கான வட்டி விகிதமானது 8.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு 8.65 சதவீதம் MLCR வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.