இந்திய ரயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வேக்கு 1.83 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்து 2022-23ஆம் நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் இந்திய ரயில்வே கடந்த நிதி ஆண்டை விட அதிக வருவாய் ஈட்டி இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் இந்திய ரயில்வேயில் 1109.38 டன் சரக்குகள் கையாளப்பட்டது என்றும் இதன் மூலம் சரக்குகள் கையாளுதல் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றுதல் உள்ளிட்ட வகைகளில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 51 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது எனவும் பயணிகள் போக்குவரத்தின் மூலமாக ரயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.