
ஐபிஎல் 2024 போட்டியில் RCB அணி ஆரம்பத்தில் தொடர்ச்சியாக தோல்வியுற்று ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்திய போதிலும், அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆறு வெற்றிகள் பெற்று மீண்டும் பல மடங்கு நம்பிக்கையை RCB அதன் ரசிகர்களிடையே பெற்றது. அதிலும் சிஎஸ்கே அணியை வென்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் போது கண்டிப்பாக இம்முறை RCB அணி கோப்பை வெல்லும் என்றே பலரும் நினைத்தனர்.
ஆனால் RCB அணி RR அணியிடம் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்த, RCB ரசிகர்கள் இது குறித்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பாக இந்த வருடம் RCB அணி கட்டாயம் கோப்பையை வெல்லும் இல்லையென்றால், நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என RCB அணி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சவால் விடுத்திருந்தார்.
தற்போது ஆர்சிபி அணி தோல்வியுற்று வெளியேறிய நிலையில் அந்த சவாலை நிறைவேற்றும் விதமாக மொட்டை அடித்து கப்பும் இல்லை தலையில் முடியும்(வார்த்தை மாற்றப்பட்டுள்ளது) இல்லை என கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவுடன், பரவாயில்லை அடுத்த வருடம் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்து வீடியோவை முடித்துக் கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பாக RCB அணி வீரர் ஒருவர் ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்வதாக சவால் விடுத்த நிலையில் அவர் அதை செய்து சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்டு அது வைரலானது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram