2024 ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெங்களூர் அணி நேற்று தோல்வியை தழுவி எலிமினேட் ஆனது. இதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியை நினைவு கூர்கிறேன், சில சமயங்களில் நினைவூட்டல் தேவைப்படும் என்று சென்னை வீரர்களின் வீடியோவை பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெங்களூர் அணியை விமர்சித்து வரும் ராயுடு, அந்த அணியை குறிவைத்து இந்த பதிவை போட்டுள்ளதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். சென்னை பந்துவீச்சாளர் தீபக் சாஹர் சல்யூட் எமோஜியுடன் கருத்து தெரிவித்தார்.