ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய RCB அணி, 172/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படிதர் 34, கோலி 33 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய RR அணி 174 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.  இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 சுற்றில் RR SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் RR 9 முறையும், SRH 10 முறையும் வென்று இருக்கின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.