முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை 2024 போட்டிக்கான “டயமண்ட் கிளப்” டிக்கெட்டுகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரிவித்துள்ளார்.
லலித் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கான ‘டயமண்ட் கிளப்’ டிக்கெட்டுகளை ஒரு இருக்கைக்கு $20000 என விற்பனை செய்வது அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் விளையாட்டை விரிவாக்கம் செய்வதற்கும், ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் தான் நடத்தப்படுகிறது. லாபம் ஈட்டுவதற்காக அல்ல. $2750-க்கு டிக்கெட் விற்பனை செய்வது என்பது கிரிக்கெட் மீதான மரியாதையை குறைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.