சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு RCB அணியின் தோல்வி குறித்து பேசி இருக்கிறார். ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், RCB அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய RCB அணி, 172/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படிதர் 34, கோலி 33 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய RR அணி 174 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.  இதனால் RCB அணி வெளியேறியது.

இந்த நிலையில் RCB அணியின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு, ஐபிஎல் கோப்பைகளை வெறும் கொண்டாட்டத்தாலும் ஆக்ரோசத்தாலும் வென்றுவிட முடியாது. கோப்பையை வெல்ல முதலில் பிளே ஆப் மற்றும் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சிஎஸ்கே வை வீழ்த்தினால் மட்டும் ஐபிஎல் கோப்பை வென்றிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.