மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன் அவர் கூறியதாவது, நடிகர் விஜய் மட்டும்தான் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார் என்று கூற முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்தனர். இதைவிட பிரம்மாண்டமான விழாக்களும் நடத்தினர். அதை நாம் பார்த்திருப்போம்.
நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது, இதை விட கூட்டம் பல மடங்கு அதிகமாகவே இருந்தது. நடிகர் விஜய் அவருடைய முதல் மாநில மாநாட்டில் கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்திருந்தார். இது பிற கட்சிகளை இழிவுபடுத்தும் செயல் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பதவிக்காக மாற்று கூட்டணியை நோக்கி கட்சிகள் ஓடவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.