ஹாலிவுட்-ன் பிரம்மாண்ட படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இந்தியன் 2 ல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் அதிதீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், படம் குறித்த சிறிய சிறிய அப்டேட்டுகள் அவ்வபோது படகு குழுவின் சார்பில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் படத்தின் இயக்குனர் சங்கர் தனது பிட்டர் பக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் இடம்பெறும்  முக்கியமான தொழில்நுட்பம் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், Scanning the advanced technology  Lola VFX La    என ட்விட் செய்துள்ளார்.

இதைப் பார்த்த சினிமா பிரியர்கள் அது என்ன தொழில்நுட்பம் என ஆராயத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசன் கடந்த கால காட்சிகள் சில இடம்பெற செய்வதற்காக அவரது முகத்தை சிறுவயது கமல் போல் மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்த முற்பட்டதாகவும், ஆனால் அதிக பொருள் செலவு காரணமாக அதற்கான முயற்சி கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து விக்ரமில் விட்டுப் போன அந்த தொழிநுட்பம்   இந்தியன் 2 திரைப்படத்தில் அமையப்போவதாக ரசிகர்கள் கணித்துள்ளனர். அதன்படி, சிறுவயது கமலை இந்தியன் 2 படத்தில் நாம் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தொழில் நுட்பம் ஹாலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் (எடுத்துக்காட்டு : Avengers end game )பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.