பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக ஷாருக்கானின் பதான் திரைப்படம் வசூலில் உச்சம் தொட்டுள்ளது. அதன்படி பதான் திரைப்படம் ரூ. 901 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த தகவலை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.