தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவரின் தந்தை தயாரிப்பாளர் சுரேஷ் பாபு. இவர் திரிஷ்யம் மற்றும் தமிழில் வெளியான பிரின்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். நடிகர் ராணா பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகர் ராணா மற்றும் அவருடைய தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் மீது ஹைதராபாத்திதை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிரமோத்குமார் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் பிரமோத்குமார் தன்னுடைய நிலத்தை ராணா மற்றும் அவருடைய தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் சேர்ந்த அபகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராணா மற்றும் அவரின் தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் மீது நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ராணா மற்றும் அவரின் தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.