கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகி வெற்றியை பெற்ற படம் “லவ் டுடே”. சுமார் 9 கோடியில் தயாராகிய இப்படம் 80 கோடி வசூலித்து சாதனை படைத்தது. ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை டைரக்டு செய்த பிரதீப் ரங்கநாதன் தான் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். இதில் சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு, ராதிகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியாகிய இப்படம் நேற்று (பிப்.11) 100-வது நாளை தொட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2வது ரவுண்ட் தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது