கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் பொன்னானி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்தனர்.

அதோடு அவர் மீது போக்சோ போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பொன்னானி விரைவு நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் முதியவர் தாமோதரனுக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 4.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்த தவறிவிட்டால் மேலும் 6.5 ஆண்டுகள் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் நீதிபதி  கூறினார்.