
உத்தரகாண்ட் மாநிலம் சால்ட் என்னும் பகுதியில் பகவத்சிங் போரா என்பவர் வசித்து வருகிறார். பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 24 ஆம் தேதி அப்பகுதியில் வாழும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன் பெற்றோரிடம் அழுது நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 30ஆம் தேதி காவல்துறையில் பாஜக நிர்வாகியான பகவத்சிங் போரா மீது புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் பகவத்சிங் போராவை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைமை பாலியல் வன்கொடுமை செய்த பகவத்சிங் போரவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.