சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கொலை செய்யப்பட்டது சென்னையைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது. இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் திருமணம் ஆகவில்லை. இந்த வழக்கில் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது இவருக்கு பெண் சபலம் இருந்த நிலையில் பாலியல் தொழிலாளியான தீபாவை தன் வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதற்காக மணிகண்டன் ‌ ரூ. 18,000 தருவதாக கூறிய நிலையில் உல்லாசத்திற்கு பிறகு ரூ.12,000 மட்டுமே தருவதாக கூறியுள்ளார். இதனால் தீபாவுக்கு மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் சுத்தியலால் தீபாவின் தலையில் அடித்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டார்.

இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மணிகண்டன் தீபாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து அடைத்தார். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவில் சூட்கேசை வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று தூங்கிவிட்டார். இதைத்தொடர்ந்து தான் நேற்று காலை சூட்கேஸ் விவரம் தெரியவந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மணிகண்டன் பிடிபட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. அதாவது இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த பிறகு அவருடைய மண்டையை பிளந்து மூளையை வெளியே எடுத்து வறுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும் மணிகண்டனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலமாக அவர் போலீசாரிடம் உடனடியாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.