கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஃபாத்திமா சஹானா என்ற மாணவி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் நேற்று முன்தினம் விடுதியின் 7வது மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த இவர் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட மாணவ மாணவிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.