
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் ரயில் நிலையத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தன்பாத் விரைவு ரயில் ஒன்று ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அதில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் வாலிபர் ஒருவரிடம் 15 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரின் பெயர் சரண்ராஜ் . இவரின் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. மேலும் அவரை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.