
கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை நிற திமிங்கலம் ஒன்று இருந்தது. அதன் உடலில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. அது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட இந்த திமிங்கலம் 14 அடி நீளம் கொண்டதாகும்.
ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த திமிங்கலம் நார்வை கடற்கரையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதன் மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த திமிங்கலத்திற்கு ரஷ்யா இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.