சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் சக்திபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு சரியாக வரவில்லை என கூறப்படுகிறது.

நேற்று மாணவரை அவரது தந்தை அழைத்து வந்து வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளார். இதனையடுத்து சேகர் மாணவனை வணிகவியல் தேர்வு எழுத அனுமதித்துள்ளார். இந்நிலையில் மாணவன் தேர்வு எழுதாமல் தூங்கி க் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை ஆசிரியர் தட்டி கேட்டு தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மாணவன் தடை செய்யப்பட்ட புகையிலேயே வாயில் வைத்து மென்று கொண்டிருந்ததை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சியடைந்து அவரை தட்டி கேட்டார். இதனால் கோபமடைந்த மாணவன் ஆசிரியை கையால் பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த சேகருக்கு மூக்கு உடைந்து படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அவரை சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.