சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் எம்.எஸ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதே போல குமார் காளையன் என்பவர் காளியப்பா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்வதாக கூறி வங்கி பரிவர்த்தனைகள் மூலம் 4 1/2 கோடி ரூபாய் பணம் வாங்கி உள்ளனர். ஆனால் கூறியபடி மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுக்காமல் அந்த நிறுவனத்தை ஏமாற்றி விட்டனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜான் விக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் மோசடி செய்த ஸ்ரீதரன் திண்டுக்கல்லை சேர்ந்த குமார் காளையன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.