கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆலந்துறை அரசு பள்ளி கலை ஆசிரியர் ராஜ்குமார் ஒரு மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அந்த பிரச்சனையின் பின்னணியில் தான் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் பள்ளியின் கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஈடுபடுகிறார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் தேடி தராமல் குற்றம் புரிந்த ஆசிரியருக்கு உதவி செய்யும் வகையில் தலைமை ஆசிரியர், கல்வித் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் ஆவணங்கள், சாட்சி ஆகியவற்றை தலைமை ஆசிரியர் அழித்து விடும் நிலை ஏற்படும். அவரை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.