ஜெய்ப்பூரிலுள்ள ஒரு அரசு பள்ளியில், ஆசிரியை தரையில் படுத்திருக்கும் போது, மாணவர்கள் சிலர் அவரது காலை மிதித்து மசாஜ் செய்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் கர்த்தார்புராவில் உள்ள அரசு பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில் மாணவிகள், தங்கள் பைகளுடன் தரையில் அமர்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது. பள்ளி முதல்வர் அஞ்சு சௌதரி, ஆசிரியை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மாணவர்களை மசாஜ் செய்ய கேட்டிருக்கலாம் என கூறியிருக்கிறார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த ஆசிரியைக்கு இடமாற்றம் செய்துள்ளார். மேலும் கல்வித் துறையினர் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகி, ஆசிரியர் மாணவர் உறவுகள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
स्कूल टीचर का वीडियो हुआ वायरल. pic.twitter.com/ReTUYkEPoj
— Prashant rai (@prashantrai280) October 10, 2024