தொலைவில் இருக்கும் உறவினர்களுக்கு எந்த ஒரு தகவல்களை அனுப்ப வேண்டும் என்றாலும் நம்முடைய நினைவிற்கு முதலில் வருவது வாட்ஸ்அப் தான். இதன் மூலம் சாட் மற்றும் வீடியோஸ் அனுப்ப முடிகிறது. இந்த வாட்ஸ் அப்பில் நாம் வீடியோ கால் செய்து தொலைவில் இருக்கும் உறவினர்களிடம் பேச முடிகின்றது. இந்நிலையில் இந்த வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்தது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை லைக் செய்வது, போலவே வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ்க்கு லைக் செய்யும் அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வந்தது. அதே போன்று தற்போது வாட்ஸ் ஆப்பில் வைக்கும் ஸ்டேட்டஸ் ரீஷேர் செய்யும் அம்சத்தையும் கொண்டு வர உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய அம்சம் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்துள்ளது.