கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலவரப்பள்ளி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் பெயிண்டரான உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் திவ்ய பிரியா ஓதூரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று திவ்யபிரியா தனது வீட்டு கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திவ்யபிரியா எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் அட்டையில் பெற்றோருக்கு பதிலாக நானே கையெழுத்து போட்டு கொண்டேன். இதனை கண்டுபிடித்து ஆசிரியர்கள் என்னை கண்டித்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர். இதனை அறிந்து பெற்றோரும் என்னை கண்டித்தனர். எனவே மன உளைச்சலில் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். விசாரணை நடத்தி வருகின்றனர்