ஒடிசா மாநிலத்தில் எந்த ஒரு அரசு நிறுவனத்திலும் பொது பட்டப்படிப்பை தொடரும் வசதியற்ற எஸ்.சி மற்றும் எஸ் டி மாணவர்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் ஒடிசா மாநில முதல்வர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமூகம் மற்றும் பொருளாதாரம் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் நம்முடைய பழங்குடியின சமூகங்களின் கல்வி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது.

அதனால் கல்வி மற்றும் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. பழங்குடியின மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் மரபுகள், பாரம்பரியம் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக ஒடிசா அரசு சிறப்பு மேம்பாட்டு கவுன்சில்களை அமைத்துள்ளது. மேலும் ஏழை எளிய எஸ் சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.