நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் சமமானி மக்கள் அன்றாடம் குடும்பம் நடத்தவே மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மது பிரியர்கள் மதுபான விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். உடுப்பி டவுன் பகுதியில் மது பிரியர்கள் ஒன்று சேர்ந்து மதுபான உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் அவர்கள் மதுபாட்டிலுக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசு  மதுபானங்கள் மீதான வரியை உயர்த்தி உள்ளது. இதனால் மதுபான விலை உயரும். இதனால் ஏழை தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்கள். விலை உயர்வால் உடல் அசத்திக்காக மதுபானம் வாங்கி குடிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மது பிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு இலவச மதுபான வழங்க வேண்டும் அல்லது மதுபான விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.