இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது ரயிலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதேசமயம் உணவு, படுக்கை வசதி மற்றும் கழிப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் ரயில்வே துறையால் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றது. அதே சமயம் பயணிகளுக்கு காத்திருப்பு அறையும் வழங்கப்படுகின்றது.

அதாவது ரயில் பயணத்தின் போது டிக்கெட் பெற்றதும் வெயில் வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இரவு நேரங்களில் ஆறு மணி நேரம் காத்திருப்பு அறையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச வைஃபை வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் கிளாக் ரூம், மருத்துவ வசதி, தங்கும் அறைகள் மற்றும் இலவசமாக உணவு ஆகியவையும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.