SBIல் கணக்கு வைத்திருபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. அதன்படி, தற்போது உங்களது கணக்கில் நீங்கள் எந்தவொரு டிரான்ஸாக்ஷனும் செய்யாத நிலையில், வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.147.50 கழிக்கப்பட்டதாக உங்களுக்கு செய்தி வந்திருந்தால் அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் வங்கியானது வருடந்தோறும் உங்களது டெபிட், ஏடிஎம் கார்டுக்கான பராமரிப்பு, சேவைச் செலவின் ஒரு பகுதியாக இத்தொகையை வங்கி எடுத்துக் கொள்கிறது. SBI வங்கி வழங்கக்கூடிய ஒவ்வொரு டெபிட்கார்டுக்கும், நுகர்வோர் ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக ரூபாய்.125 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தவேண்டும்.

ரூபாய்.125ல் 18 சதவீதம் என்பது ரூ.22.5 ஆகும். ஆகவே SBI வாடிக்கையாளர் கணக்குகளிலிருந்து ரூபாய்.147.5 கழிக்கப்படும். டெபிட்கார்டை மாற்றுவதற்கு வங்கி உங்களிடம் இருந்து ரூபாய்.300+GST-ஐ வசூலிக்கிறது. SBI-ஐ விட அதிகமான நிதிநிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் டெபிட்/ஏடிஎம் கார்டுகளை செயலில் வைத்திருக்க ஒவ்வொரு வருடமும் பணம் செலவழிக்கிறது. ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட ஏராளமான வங்கிகளுக்கு டெபிட் கார்டுக்கான வருடாந்திர செலவு ஒரே மாதிரியாக இருக்கும்.

SBI தன் அதிகாரப்பூர்வ இணையதளபக்கத்தில் ” நவம்பர்-15, 2022 அனைத்து வணிகர் இஎம்ஐ டிரான்ஸாக்ஷன்களுக்குரிய ப்ராசஸிங் கட்டணம் ரூபாய்.199 +பொருந்தக்கூடிய வரிகள் ரூ.99 +பொருந்தக்கூடிய வரிகள் என மாற்றி அமைக்கப்படும். நவ,.15, 2022 அன்று அனைத்து வாடகைக் கட்டண டிரான்ஸாக்ஷன்களுக்கும் செயலாக்கக்கட்டணம் ரூ.99 +பொருந்தக்கூடிய வரிகள் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது. SBI தன் வாடிக்கையாளர்களிடம் வாடகை மற்றும் வணிகர் இஎம்ஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்கு பிரீமியத்தை வசூலித்த காலம் நிர்ணயித்திருந்தது. இவ்வகையான டிரான்ஸாக்ஷன்களுக்கு ப்ராசஸிங் கட்டணத்தை வங்கி அதிகரித்து உள்ளது.