இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பரிவர்த்தனை செய்யாமல் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செய்திகள் வருவதாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை எனவும் இருப்பு பராமரிப்பு மற்றும் சேவை கட்டணம் என்ற பெயரில் ரூ.147.50 டெபிட் செய்யப்படும் என்றும் வங்கித் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். பணம் எடுக்கும் வரம்பை மீறினால் ஏடிஎம்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம் தான் என்று எஸ்பிஐ வங்கி தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.