இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு SBI-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் எஃப்டி திட்டம் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் வருகிறது.

குறிப்பாக, பொது மக்களுக்கு 7.10%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.60% வட்டி வழங்குகிறது. மற்ற tenors-களுடன் ஒப்பிடுகையில் அதிக வட்டி விகிதம் கொண்ட ஸ்பெஷல் FD திட்டம் இதுவாகும். சிறப்பு திட்டம்  ஜூன் 30  ஆம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது