எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில்   தற்போது பாரத ஸ்டேட் வங்கி அவர்களது வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி வீட்டுக்கடன் வாங்குவோருக்கு 65 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது வட்டியில் இருந்து 0.65% தள்ளுபடி. இதற்கு கடன் பெறுவோரின் Cibil Score 700 முதல் 750ஆக இருக்க வேண்டும். இதனை பெறுவதற்கான கடைசி தேதி இன்று (டிசம்பர் 31, 2023) ஆகும். உடனே வங்கிக் கிளையை அணுகுங்கள்