விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில், அமாவாசை மற்றும் பௌர்ணமி என மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக வத்திராயிருப்பில் பெய்த கனமழை காரணமாக, கார்த்திகை அமாவாசையின் போது தரிசனத்திற்காக மலை ஏற தடை விதிக்கப்பட்டது.

சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், எலும்போடை, மாங்கனியோடை, சங்கிப்பறை, பிலவாடி கருப்பசாமி கோவில் அருகே உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி பக்தர்களை ஏற விடாமல் தடுக்க வனத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தடையை பொருட்படுத்தாமல், அமாவாசை காலை முதலே மலையடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதில் சிலர் சூடமேற்றியும், சிலர் மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தியும் வழிபட்டு சென்றனர்.