நடிகர் சந்தானம் இப்போது டிக்கிலோனா திரைப்படத்தின் டைரக்டர் கார்த்திக்யோகி இயக்கக்கூடிய “வடக்குப்பட்டி ராமசாமி” படத்தில் நடிக்க உள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். அதோடு இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் புது அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இப்படத்தில் பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த மேகா ஆகாஷ் இணைந்திருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்து உள்ளது.