கோலிவுட் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வருகிற 17ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகி இருக்கும் “வாத்தி” படம் நேரடியாக வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, நரேன் உட்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கல்வியை மையப்படுத்தி ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளை இப்போது படக்குழு துவங்கியுள்ளது. அந்த வகையில் இப்படத்தை வழங்க இருக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாத்தி படத்தின் பேனர்களை திரையரங்குகளில் வைக்கும் வீடியோவை பகிர்ந்து புரமோஷனை துவங்கியுள்ளது. தற்போது அது ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.