Samsung நிறுவனம் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களின் அட்டகாசமான டீசர் வெளியானது. இரு Galaxy A சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் January 18-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் டீசர்களில் புது ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. ஆனாலும்,  புது ஸ்மார்ட்போன்கள் Galaxy A14 5ஜி மற்றும் Galaxy A23 5ஜி பெயர்களில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் Galaxy A14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் அம்சங்கள் ஏற்கனவே வெளியானது. Samsung இந்தியா சப்போர்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆசம் கிரீன், ஆசம் பர்கண்டி மற்றும் ஆசம் பிளாக் நிறங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி A14 5ஜி அம்சங்கள்: 6.6 இன்ச் 1080×2408 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி எல்சிடி ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், Mali-G57 MC2 GPU, 4 ஜிபி, 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி, 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5.0, டூயல் சிம் ஸ்லாட், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ சென்சார், 13MP செல்ஃபி கேமரா பக்கவாடடில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யுஎஸ்பி டைப் சி 5000 எம்ஏஹெச் பேட்டரி