உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புது அம்சத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன்படி WABetaInfo என்ற புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இனி வாட்ஸ் அப்பில் ஃபார்வர்டு மெசேஜை caption உடன் அனுப்பலாம். பொதுவாக ஃபார்வர்டு மெசேஜை மீண்டும் ஃபார்வர்டு செய்தால் கேப்ஷன் இல்லாமல் பகிரப்படும்.

ஆனால் தற்போது ஃபார்வர்டு மெசேஜை மீண்டும் ஃபார்வர்டு செய்தால் கேப்ஷன் உடன் பகிரப்படும். நீங்கள் கேப்ஷன் உடன் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை  ஃபார்வர்டு செய்யும் அதே கேப்ஷன் உடன் ஃபார்வர்டு ஆகும். இப்படி செய்யும்போது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ் வரும். இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் கேப்ஷன் இல்லாமலும் மெசேஜை ஃபார்வர்டு செய்து கொள்ளலாம்.