பீகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கன்னையா பெலாரி (Kanhaiya Bhelari), ஒரே பாலினத் திருமணங்களால்தான் (Gay/Same-Sex Marriages) நிலநடுக்கங்கள்ஏற்படுகின்றன என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதால், அவர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிறுவர்கள், சிறுவர்களையும்; சிறுமிகள், சிறுமிகளையும் திருமணம் செய்துகொள்வது தவறு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
லல்லன்டாப் (Lallantop) என்ற யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஒரே பாலின உறவுகளில் பெரியவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் என்ன தவறு என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“Earthquake happens because of Gay people”
~ Kanhaiya Bhelari, Congressi journalist pic.twitter.com/bCgbNOPZPC
— Ankur Singh (@iAnkurSingh) November 22, 2025
அதற்கு பதிலளித்த கன்னையா பெலாரி, “இந்த உறவுகள்தான் நிலநடுக்கங்கள் ஏற்படக் காரணம்” என்று அதிர்ச்சியூட்டும் விளக்கத்தைக் கொடுத்தார்.
மேலும், நிலநடுக்கம் ஏற்படுவது இயற்கையான புவியியல் செயல்பாடுகளால் தான் என்று அறிவியல் உண்மையை எடுத்துக்கூறிய பின்னரும், அவர் அதை ஏற்க மறுத்து, சமூகம் நவீனமடைவதாலேயே அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.
அவரது இந்தப் பேச்சு, அறிவியல் காரணத்தை மறுப்பதாகவும், வினோதமாகவும் இருப்பதாகக் கருதிப் பலரும் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
