எம்எஸ் தோனி கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

42 வயதான தோனி, 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இருந்து வருகிறார் – 2013 ஸ்பாட் பிக்சிங் வழக்கை அடுத்து சென்னை அணிக்கு 2  ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை தவிர அனைத்து சீசனிலும் கேப்டனாக அணியை வழிநடத்தி வந்தார். 2022 சீசனின் தொடக்கத்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இருப்பினும், 8 போட்டிகளுக்குப் பிறகு தோனி கேப்டனாக திரும்பினார். அவர் 212 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கேயை வழிநடத்தியுள்ளார், 128 வெற்றி மற்றும் 82 தோல்வியடைந்தார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ் தோனி விலகியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2024 இல் அணியை வழிநடத்துவார். கெய்க்வாட் 2019 முதல்சென்னை அணியின் ஒரு பகுதியில் இருந்து 52 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே 4வது பட்டத்தை வென்றபோது, ​​மகராஷ்டிரா பேட்டர் ருதுராஜ் ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

எம்எஸ் தோனி கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. வீரர்களின் கோப்பை அறிமுக போட்டோ சூட் நிகழ்ச்சியில் சென்னை அணி சார்பில் ருதுராஜ் பங்கேற்றார்.

கடந்த ஆண்டு அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான டி20 இறுதிப் போட்டியில் தோனி தலைமையில் சிஎஸ்கே 5வது ஐபிஎல் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இது அனைத்து டி20 போட்டிகளிலும் CSK இன் 7வது பட்டமாகும், இது மும்பை மற்றும் டைட்டன்ஸ் (தென்னாப்பிரிக்கா) உடன் சமமாக இருந்தது, மேலும் சியால்கோட் ஸ்டாலியன்ஸுக்கு (8) பின்னால் 2வது இடத்தில் சென்னை அணி உள்ளது.

தோனி ஆகஸ்ட் 15, 2020 அன்று தனது சர்வதேச ஓய்வை அறிவித்தார். அவர் இந்தியாவுக்கு 2007 டி20 உலகக்கோப்பை பட்டம், 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

2024 ஐபிஎல் நாளை (21ஆம் தேதி) முதல் ஆரம்பமாக உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு மோதுகின்றது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் சென்னை சேப்பாக் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.