உக்ரைனில் தற்கொலை படை தாக்குதல் நடத்த ரஷ்யா அதிபர் புதின் உத்திரவிட்டதாக தகவல் வெளியாகின்றது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி போரை தொடங்கியது. இதில் உக்ரைன் கிழக்கு சில பகுதிகளில் ரஷ்யா தன் வசம் படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் அந்நாட்டு ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றில் வெளியிட்ட செய்தியில் ரஷ்ய அதிபர் புதின் தற்கொலை படை தாக்குதல் நடத்த உத்தரவை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தால் இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.